திமுக ஆட்சிக்கு வந்த பின் தன் மீது குறிவைத்து பொய்வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்க குற்றச்சாட்டினார்
சிவகாசியில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தன் மீது பொய் வழக்குப் பதியப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார முகமாக இருப்பதால் தன்னை தொடர்ந்து திமுக அரசு குறிவைப்பதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் யார் எதிர்த்து நின்றாலும் அதிமுக தான் வெற்றி பெரும் என உறுதிப்படத் தெரிவித்தார்.