ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கிஷான் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி அம்ரிதாவுடன் கிஷான் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டை அருகே பயணித்த போது ரயிலின் கழிவறையிலேயே அம்ரிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.