போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் சில தினங்களுக்கு முன்பு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை கடத்தி வந்த அபுல் அசின் சையது என்பவரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 43 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போதைப்பொருளைப் பெங்களூருக்கு அனுப்பி, அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்றும், இலங்கைக்குக் கடத்த நாகையைச் சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் என்பவருக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாகைக்கு விரைந்த மகாராஷ்டிரா போலீசார், விழுந்தமாவடி பகுதியில் தங்கியிருந்த மகாலிங்கத்தைக் கைது செய்து கீழையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திமுக நிர்வாகி மகாலிங்கம் ஏற்கனவே பல போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.