பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவிற்கு அரணாக செயல்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான 12 நாள் யுத்தம் முடிந்து ஒரு மாதத்தைக் கடந்து விட்டது. இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தியதால் ஈரானின் அணுசக்தி மையங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
இதனால் கவலை அடைந்த ஈரான், எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை, தெஹ்ரானில் இருந்து தெற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இஸ்ஃபஹான் நகருக்கு அருகே ஈரான் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய அரணாக விளங்கியது. 6
00 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஏவுகணைகளை கண்டறிந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரும்போது வழிமறித்து தகர்க்கக்கூடிய வல்லமை கொண்டது S-400. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அழுத்தமான செய்தி அனுப்பியுள்ளது ஈரான்.