மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், மலேகான் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில், முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படை 300க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்திய நிலையில், 2011ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகாமைக்கு வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.