இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பயிற்சி செவிலியர் ஊசி போடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என்றும், மருத்துவர்களும் செவிலியர்களும் உரிய நேரத்தில் பணிக்கு வராததால், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு செவிலியர்கள் இல்லாததால் பயிற்சி மாணவிகளை கொண்டு மருத்துவம் பார்த்து வரும் நிலையில், பள்ளி சிறுவனுக்கு பயிற்சி செவிலியர் ஊசிபோடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.