காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மழை நீர் வடி கால்வாயில் பக்கச்சுவர் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரதநாஜபுரம் ஊராட்சியில் நீர்வளத்துறைக் கட்டுப்பாட்டில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இங்கு அரசின் நிதியில் இருந்து 36 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்கச்சுவர் கட்டும் பணிகளுக்கான பூஜை நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கால்வாயை சுற்றிலும் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் அதனை முழுமையாக அளந்த பின் பக்கச்சுவர் எழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.