திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அறிவு சார் நகரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக அரசு சுமார் ஆயிரத்து 703 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கல்பட்டு, ஞானம்பாக்கம் உள்ளிட்ட 6 கிராமங்களை உள்ளடக்கிய 870 ஏக்கர் பரப்பளவில் அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குச் சென்ற பாமக தலைவர் அன்புமணி திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர், வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்.