பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 48 பயணிகள் காயமடைந்தனர்.
லாகூரிலிருந்து ராவல்பிண்டி நோக்கி இஸ்லாமாபாத் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஷேக்குபுரா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் தடம் புரண்ட ரயிலில் சிக்கியிருந்த பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 48 பயணிகள் காயமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.