அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். தற்போது மேலும் ஒருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்றான ஒஹியோவின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதுரா ஸ்ரீதரன் என்பவர் பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் அந்த மாகாணத்தின் 12வது சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன் மூலம், ஒஹியோ மாகாணத்தின் முக்கிய வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளை மதுரா ஸ்ரீதரன் கவனிக்கவுள்ளார்.
இந்திய முறைப்படி நெற்றியில் திலகமணிந்து, அமெரிக்க நீதிமன்றங்களில் பணியாற்றியதன் மூலம் அவர் ஏற்கனவே கவனம் பெற்றார். தற்போது அவர் உயர் பொறுப்புக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.