ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உட்பட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்து 8 மணி நேரம்தான் ஆகிறது என்றும், அதனால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் எனவும் கூறினார்.
2ஆம் கட்ட வரிவிதிப்பில் இன்னும் நிறைய பார்க்க போகிறீர்கள் எனவும் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா போன்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அதனை எப்படி செய்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் டிரம்ப் சூககமாக பதிலளித்தார்.