சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விசாரணைக்குக் காவல் நிலையம் அழைத்த முதல்நிலை காவலரைத் தந்தையும் மகனும் தாக்கி விட்டுத் தப்பியோடினர்.
செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட லட்சுமண கவுண்டனூரில் வசிக்கும் கந்தசாமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செல்லம்மாள் எடப்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி மற்றும் அவரது மகன் வேலுமணி ஆகிய இருவரையும் விசாரணைக்காக எடப்பாடி காவல் நிலையம் வரும்படி முதல் நிலை காவலர் சாகித் அழைத்துள்ளார்.
அப்போது மதுபோதையிலிருந்த தந்தை, மகன் இருவரும் காவலரைக் கடுமையாகத் தாக்கி விட்டுத் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டுத் தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.