நைஜீரியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது.
நைஜீரியாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு ஒரு தீவிர பிரச்சனையாக உள்ளது. வறுமை காரணமாக நைஜீரியாவில் பல குடும்பங்களால் குழந்தைகளுக்கு போதுமான மற்றும் சத்தான உணவை வாங்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் குழந்தைகள் இறப்பு விகிதம் நைஜீரியாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.