இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த 25 சதவீத வரி, கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அதோடு மேலும் 25 சதவீத வரி விதித்து, வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கனவே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 4 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழு இம்மாதம் 25ம் தேதி இந்தியா வருவதாக இருந்தது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், வரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என்றார்.
மேலும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.