பாகிஸ்தான் வீழ்ந்தால் உலகத்தின் பாதியை அழித்துவிடுவோம் என அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இரண்டாவது முறையாகப் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீர் அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அவர் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில் புளோரிடாவில் உள்ள டம்பா பகுதியில் அசிம் முனீருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு எனவும் நாங்கள் வீழ்ச்சி அடைகிறோம் என நினைத்தால் பாதி உலகத்தைச் சேர்த்து வீழ்த்துவோம் எனவும் தெரிவித்தார்.
சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை ஏவி அழிப்போம் எனவும் கூறினார்.
டிரம்பின் 50 சதவீத வரிவிதிப்பிற்கு மத்தியில் அமெரிக்க மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீர், அணு ஆயுத எச்சரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.