2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்துத் தேர்வு எழுதும் முறையைக் கொண்டுவர சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, 9ம் வகுப்பில் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுதும் புதிய மதிப்பீடு திட்டத்துக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுவதற்குப் பதிலாக, பாடப் புத்தகங்கள், நூலகங்கள், பள்ளிகள் சார்பில் வழங்கப்பட்ட குறிப்புகளைத் தேர்வு அறைக்கு எடுத்துச்சென்று தேர்வு எழுத முடியும்.
திறன் அடிப்படையிலான கற்றலை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.