சென்னை கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டுப்போனதாக உரிமையாளர் சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
கூடுவாஞ்சேரி அருகே வேதாச்சலம் நகரைச் சேர்ந்த சசிகலா என்பவர் ஜூன் எனப் பெயர் கொண்ட பூனையைக் கடந்த 3 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
வழக்கம்போலப் பூனைக்கு உணவு கொடுத்துவிட்டு தூங்க சென்ற நிலையில், காலையில் எழுந்து பார்த்தபோது பூனை காணாமல்போனது தெரியவந்தது.
பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பூனையைத் தூக்கி சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பூனையின் புகைப்படம் மற்றும் பூனை திருடப்பட்ட சிசிடிவி காட்சிகளை இணையத்தில் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். மேலும், தயவுகூர்ந்து பூனையைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.