திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே புத்தாறு ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நன்னிலம் அருகே வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், ஹரிஹரன், மணிகண்டன் உள்ளிட்ட 4 இளைஞர்கள் புத்தாறு ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.
இளைஞர்கள் நீரில் மூழ்கி தத்தளிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பரிதாபமாக 4 இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து 4 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.