சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்திய திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், திரையுலக பொன்விழா நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து பல தசாப்தங்களாக முன்னணியில் இருப்பதுடன், இந்திய சினிமாவின் சர்வதேச அடையாளமகவும் ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் மென்மேலும் பல உச்சங்களைத் தொட எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.