இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மனைவியுடன் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினத்தையொட்டி அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று அமித்ஷா தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
பிரதமரின் அறிவுறுத்தலின்படி சமூக வலைதளங்களில் தங்களது சுயவிவரப் படங்களையும், மூவர்ண கொடியாக அனைவரையும் மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.