சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசியில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் வெள்ளிக் கிழமை, சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக, தென்காசி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தென்காசி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். உடமைகளை சோதனை செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.