இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றுவோம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினத்தையொட்டி அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று அண்ணாமலை தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நமது 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள எனது இல்லத்தில் இன்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கும் பெருமையைப் பெற்றேன், மேலும் #HarGharTiranga இயக்கத்தில் இணைந்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூவர்ணக் கொடி உயரப் பறக்கும்போது, அதன் ஒவ்வொரு அலையும் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பெருமையை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியாகவும் அமைகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.