மேற்குத் தாம்பரம் அருகே தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்பவரது மகன் நித்திஷ், குன்றத்தூர் அடுத்த சோமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
இவர் விடுதி வளாகத்தில் நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்ததில் மயக்கமடைந்தார்.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.