ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியச் சுதந்திர தினவிழாவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சீர்குலைக்க முயன்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியே, இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதற்காக ஏராளமான இந்தியர்கள் தூதரகத்தின் வெளியே கூடியிருந்தனர். அப்போது அங்குப் பிரிவினைவாத காலிஸ்தானிய கொடிகளை ஏந்தியபடி வந்த ஒரு பிரிவினர், காலிஸ்தான் தேசத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்குக் குழுமியிருந்த இந்தியர்கள் மற்றும் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உள்ளூர் போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.