குடைக்குள் மழை என்பதைக் கேள்வி பட்டிருப்போம்…. குடைக்குள் ஏர்கூலர் என்பதை கேள்விபட்டிருப்போமா… சீனாவில் தான் இந்த பிரத்யேக குடையின் விற்பனை களைகட்டியுள்ளது.
வாட்டி வதைக்கும் வெயிலைச் சமாளிக்க வித வித கண்டுபிடிப்புகள் பல்வேறு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏனென்றால், வெப்பத்தில் இருந்து தப்பிக்க உதவும் பொருட்களுக்கு எப்போதும் மவுசு இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் தான் சீனாவில் ஏர்கூலர் குடை விற்பனை அமோகமாகக் காணப்படுகிறது. வீட்டில் ஒரு ஏர்கூலர் எவ்வாறு செயல்படுமோ, அதே தொழில்நுட்பம் இந்த குடைக்குள் சிறிய வடிவில் பொருத்தப்பட்டுள்ளது.
குடைகளுக்குள் மட்டுமல்ல, தொப்பிகளுக்குள்ளேயும் சிறிய ரக ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.