கடும் வெப்பத்தால் சிக்கி தவிக்கும் ஐரோப்பிய நாடுகள், காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றன.
ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றிலேயே இந்த வருடம் தான் அதிக அளவு காட்டுத்தீ பரவி வனப்பகுதிகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக பிரான்ஸ், கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாவதால், அந்த நாடுகளில் சேதம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் சுமார் 40 ஏக்கர் வனப்பகுதிகள் தீயில் கருகி நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
தீயணைப்பு வீரர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கியும், ஹெலிகாப்டர் மூலம் ரசாயனம் தூவியும் தீயை அணைக்க எடுக்கும் முயற்சிகள், இதுவரையில் பெரிதாக கை கொடுக்கவில்லை.
ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாலும் என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த நாடுகளின் அரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. தீயை அணைப்பதற்கு இயற்கை அன்னையும் பெரிதும் உதவவில்லை என்பதால், சேதம் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.