அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து நெஞ்சை உலுக்கச் செய்தது.
சான் பிரான்சிஸ்கோ நகரில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஃபோர்டு முஸ்டாங் கார் தீடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எவ்வளவோ முயன்றும் கார் கட்டுப்பாட்டிற்குள் வராததால் நம்பிக்கை இழந்த ஓட்டுநர், ஸ்டேரிங்கில் இருந்து கையை எடுத்துவிட்டு, இறைவனை வேண்டத் தொடங்க, அதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
தடுப்புச்சுவரில் உரசியபடியே சென்ற கார், அது முடிந்ததும் பக்கத்தில் உள்ள டிராக்கிற்கு செல்ல …அப்போது அந்த பாதையில் அசுர வேகத்தில் வந்த கார், போர்டு கார் மீது மோதி பல்டி அடித்துக் கவிழ்ந்தது. பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.