கோவை மாவட்டம் காரமடை அருகே அதிகாரிகள் இல்லாமல் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதாக வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.
தோழம்பாளையம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை ஒட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் இல்லாமலும், பொதுமக்கள் பெரிய அளவில் யாரும் இல்லாமலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்களை வைத்து கூட்டம் நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.