அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியை நிலைநாட்ட இருநாடுகள் மேற்கொள்ளும் முயற்சியும், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றமும் பாராட்டுக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியா- உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வருவதையே உலகம் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.