ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே முதல் முறையாக மாநில அளவிலான படகுப்போட்டி நடைபெற்றது. சத்தியமங்கலம் அடுத்த காவிலிபாளையத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
100 மீட்டர், 200 மீட்டர் வரை நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டி தொடங்கியதும் படகுகளைப் போட்டி போட்டுக்கொண்டு இயக்கினர். அப்போது காவலிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி படகு போட்டியைக் கண்டு ரசித்தனர். குறைந்த நேரத்தில் வெற்றி இலக்கை அடைந்த போட்டியாளர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.