இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் டெல் அவிவ் பகுதியில் மக்கள் அலறியடித்தப்படி ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏமனில் உள்ள ஹூத்திகள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஏமன் தலைநகர் மீது இஸ்ரேல் ஐடிஎஃப் குண்டுகளை வீசி தாக்கிய சிறிது நேரத்தில், இஸ்ரேல் மீது ஹூத்திகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஹூத்திகள் ஏவுகணைகளை வீசி தாக்குதலால் டெல் அவிவ் பகுதியில் சைரன்கள் ஒலித்தன். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்தப்படி ஓடினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.