தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே விற்றுத் தீர்ந்தன.
அக்டோபர் 20ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 17ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், பிற பகுதியில் இருந்து சென்னைக்குமான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.