நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேர்வலாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 123.52 அடியை எட்டியுள்ளது.
தொடர் மழை காரணமாக காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.