இண்டி கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இண்டி கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சுப்ரியா சுலோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர்கள் இண்டி கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது….