டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய உடன், அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பராக் அக்ரவால் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்திருக்கிறார். என்னவென்றால் Parallel Web Systems என்ற ஏஐ நிறுவனத்தை அவர் சொந்தமாகத் தொடங்கி இருக்கிறார். உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆக்கிரமித்து வருகிறது.
இந்தநிலையில் தான் பராக் அகர்வால் தனக்கென சொந்தமாக ஒரு ஏஐ நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். Parallel Web Systems என்ற பெயரில் அவர் தொடங்கி இருக்கக்கூடிய இந்த நிறுவனம் ஏஐ செயலிகள், கருவிகள் ஆன்லைன் ஆய்வுகளை வேகமாகவும் துல்லியமாகவும் நடத்துவதற்கு உதவக்கூடிய வகையில் கிளவுட் பிளாட்பார்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவருடைய நிறுவனத்தில் முதலீடு செய்ய பல்வேறு முக்கிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. எது எப்படியோ நம் நாட்டை சேர்ந்த ஒருவர் ஏஐ தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிக் கொடி நாட்டினால், அது நமக்குப் பெருமைதானே.