அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.
அப்போது வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.