உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் சாத்தியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அதன் தொடர்ச்சியாக வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மேலோனி உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன், அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின்னர் ரஷ்யா- உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை விற்கப்படுவதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், 40 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் – ரஷ்ய பிரதிநிதிகள் இடையேயான நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.