ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு கருதிக் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.