நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் சோலார் பேனல்களை அமைத்து இந்திய ரயில்வே சாதித்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்திய ரயில்வே, சூரியசக்தி, காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. அடுத்தகட்டமாக ரயில் தண்டவாளங்களுக்கு இடையே சூரிய மின் தகடுகளைப் பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை ரயில்வே கையிலெடுத்துள்ளது.
அதன்படி நாட்டிலேயே முதன் முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையம் அருகே கோமோமோட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் 70 மீட்டர் தூரத்துக்கு 28 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து தினந்தோறும் 15 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப, சோலார் பேனல்களை அகற்றவும், மாற்றக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் செயல்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.