அமெரிக்காவிற்குச் சென்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்திய முறைப்படி கரங்களை கூப்பி நமஸ்தே என வணக்கம் தெரிவித்த வீடியோ வைரலாகியுள்ளது.
3 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார்.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதில் பங்கேற்பதற்காக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அமெரிக்காவுக்குச் சென்றார்.
அப்போது அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிரம்பின் உதவியாளரான அமெரிக்காவின் மோனிகா கிரவுலி வரவேற்றார். அதற்குப் பதிலுக்கு மெலோனி, இந்திய முறைப்படி கரங்களைக் கூப்பி நமஸ்தே என வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.