ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குப்படுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் விளையாட்டு தளங்களை ஒழுங்குப்படுத்தும் மசோதாவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.
அதில், பந்தயம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான சமூக தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இளைஞர்கள் மோசடிக்கு ஆளாகாமல் தடுக்கவும், சூதாட்டத்துக்கு அபராதம் விதிப்பதும் மசோதாவின் முதன்மை நோக்கமாக உள்ளதாகக் கூறினார்.
மேலும், விதிகளை மீறி ஆன்லைன் பண விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கும், நிதியை அங்கீகரிப்பவர்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அப்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குப்படுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.