தெலங்கானா மாநிலத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முட்டி மோதி விட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சவுத்துபால் மண்டல் பகுதியில் அமைந்துள்ள டோல்கேட் ஒன்றில் டிராபிக் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஹெல்மேட் அணியாமல் வந்த நபரை கண்ட ஆசிப் என்ற காவலர் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த அந்த நபர், ஆக்ஸிலரேட்டரை முறுக்க, பைக் வேகமாக மோதி போக்குவரத்து காவலர் தூக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த காவலரை மீட்ட சக போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். போக்குவரத்து காவலரை பைக்கில் மோதி விட்டு தப்பிய விஷால் என்ற நபரை கைது செய்த போலீசார், அவரை நையப்புடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.