ஆவணித் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில், சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 12 நாட்கள் நடைபெறும் ஆவணித் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
விழாவின் 8ம் நாளான இன்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்குத் திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என விண்ணதிரப் பக்தி முழக்கம் எழுப்பினர்.