டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்புப் வழங்கி உள்ளது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தனது அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தபோது குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்ற நபர் ரேகா குப்தாவைத் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து ராஜேஷ் கிம்ஜியை கைது செய்த போலீசார் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்படுத்தினர். 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து அவரது இல்லத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.