உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு, தனது மாற்றுத் திறனாளி மகனை முதுகில் சுமந்து வந்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மகனும், தனது தந்தையைப் பார்த்து வளர்வது மட்டுமல்ல, மகனுக்கு ரோல்மாடலும் தந்தைதான். மகனின் கனவுகளை நனவாக்கவும், ஆசைகளை நிறைவேற்றவும் தந்தையின் போராட்டத்திற்கும், பாசத்திற்கும் எல்லைகள் என்ற ஒன்று இல்லை. அந்த வகையில் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற கொல்கத்தாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ளூர்க் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை காண மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த சிறுவனின் தந்தை அவனை தன் முதுகில் சுமந்து சென்று கால்பந்து போட்டியைக் காண வைத்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.