சேலத்தில் நடந்த இல.கணேசன் நினைவஞ்சலி கூட்டத்தில் சேவா பாரதி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாதவரம் இல்லத்தில் பாஜகச் சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜக மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர்க் கோபிநாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் வித்யா பாரதி மாநில தலைவர்க் கிருஷ்ணா செட்டி, தேசிய சேவா சமிதி தலைவர் ஹரிஹரக் கோபால், வனவாசி சேவா கேந்திரா மாநிலச் செயலாளர் முருகேசன், சேவா பாரதி மண்டல தலைவர் மோகன் குமரன், இந்து கோவில்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில அமைப்பாளர்த் திருஞானம், பிஎம்எஸ் மருத்துவமனைத் தேசியச் செயலாளர் ரவி, ஆர்எஸ்எஸ் மூத்த சாம் சேவாக் நிர்வாகி ஜெயராம், சேலம் இஸ்கான் கோவில் நிர்வாகி ஸ்ரீராம் உள்ளிட்டோர்க் கலந்து கொண்டனர்.