பிரான்ஸில் காட்டுத்தீயை அணைக்க ஏரியில் நீர் எடுக்கச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ பற்றிப் பரவி வருகிறது. இதில், பிரான்ஸ் நாட்டிலும் காட்டுத்தீ பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனை அணைப்பதற்காகத் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொண்டும் தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பிரான்சின் வடமேற்கே ரோஸ்போர்டென் நகரத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்நிலையில், மொரேன் 29 ரக ஹெலிகாப்டர் ஒன்று அந்த ஏரியில் நீர் எடுக்கச் சென்றது.
அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது. ஏரியின் மேல் வட்டமடித்து நீருக்குள் விழுந்து விட்டது. எனினும், இந்தச் சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் தீயணைப்பு வீரர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.