அமெரிக்காவின் அரிசோனா பகுதியைச் சூழ்ந்த புழுதி புயலால் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன.
அமெரிக்காவின் பீனிக்ஸ் மற்றும் அரிசோனா நகரத்தின் சில பகுதிகளைப் புழுதி புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும், பல நூறு மீட்டர் உயரத்திற்குத் தூசிகள் கலந்த மண் துகள்கள் எழுந்ததாகவும், அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக ஸ்கை ஹார்பர்ச் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன. மின்சாரம் இன்றி 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்த் தவிக்கும் நிலைக்கு ஆளாகினர்.