அமெரிக்காவின் எச்1-பி விசா மற்றும் கிரீன் கார்டைப் பெறும் நடைமுறையில் பெரியளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் விசா மற்றும் குடியுரிமை விதிகளைக் கடுமையாக்கி வருகிறார். விசா பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் செயல்பட்டு வந்த குடியுரிமை மற்றும் புலம் பெயர்ந்தோர் சேவை துறையையும் அவர் மூடினார்.
இந்நிலையில், விசா மற்றும் கிரீன் கார்டு திட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.
தற்போதுள்ள எச்1-பி விசா வழங்கும் நடைமுறை மோசடியான ஒன்று என்றும், அமெரிக்க வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை நிரப்ப அது அனுமதிக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.