பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூரில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் மண்கட்டி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.
இதேபோன்று கொட்டாம்பட்டியில் இந்து முண்ணனி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைனில் வர்த்தகம் செய்வதை இந்திய மக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்திய பொருட்களையே வாங்குவோம் என விநாயகர் மீது உறுதிமொழி எடுக்க வேண்டும் என ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்தார்.